தேவையான பொருட்கள் மாதுளை முத்துக்கள் - 1 கிண்ணம் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் புதினாத் தழை (பொடியாக நறுக்கியது) - 1/4 கிண்ணம் ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் (அல்லது) விதைகள் நீக்கிய jalapeno மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு வாயகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் போட்டு ஒன்றாகக் கலந்து, குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு மணி நேரம் வைக்கவும். சால்சா தயார்.
சரஸ்வதி தியாகராஜன் |