OSAATவழங்கிய நாட்டிய-ராகா 2008
2008 பிப்ரவரி 23, 24 நாட்களில் 'ஒரு சமயம் ஒரு பள்ளி' (One School at a time-OSAAT) அமைப்பினர் மாபெரும் கலைநிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தியா வின் ஊரகப் பகுதிகளில் அமைந்திருக்கும் 3 பள்ளிகளை மேம்படுத்த நிதி திரட்டுவதற் காக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் 37 நடனக் குழுக்களும், 38 இசைக் குழுவின ரும் கலந்துகொண்டனர். சுமார் 1000 ரசிகர் களை இந்நிகழ்ச்சி மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மெக்கா·பீ மையத்தில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில் கதக், ஒடிஸி, பரதநாட்டியம், குச்சிபுடி நடனங்கள் இடம்பெற்றன. இரண்டாம் நாள் இசை நிகழ்ச்சிகள் சன்னிவேல் இந்துத் திருக்கோவிலில் நடபெற்றன. முன்னிலைக் கலைஞர்களான உஸ்தாத் சுரீந்தர் மான், தீபக் ராம், ஜயா நரஹரி, சகுந்தலா மூர்த்தி ஆகியோர் வந்து பங்கேற்ற கலைஞர்களை மனமுவந்து வாழ்த்தினர்.

விஸ்வபாரதி வித்யா சமஸ்தே (பத்ராவதி), நஜாராபாத் அரசுப் பள்ளி (மைசூர்), தண்டலம் பள்ளி (சென்னை) ஆகிய பள்ளிகளில் 2008 ஆண்டுக்கான பணிகள் செய்யப்படும். மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட்ட நிறுவனங்கள் நீங்கள் கொடுக்கும் நன்கொடைக்குச் சம அளவு நிதி வழங்கு தகுதியை ஓசாட் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. உங்கள் நிறுவனத்திலும் இதனைப் பயன்படுத்திக்

கொள்ள விரும்பினால் info@osaat.org என்ற மின்னஞ்சல்

-

© TamilOnline.com