மார்ச் 5, 2008 அன்று மஹா சிவராத்திரி ஆண்டோவரில் உள்ள சின்மயா மிஷனில் கொண்டாடப்பட்டது. நள்ளிரவுவரை ஸ்ரீருத்ரம் ஓதி, அபிஷேகம் நடந்தது. ஸ்ரீனிவாச சாஸ்திரி, நாகேந்திர சாஸ்திரி ஆகியோர் ருத்ராபிஷேகம், வில்வ அர்ச்சனை ஆகிய வற்றைச் செய்தனர். சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ஆஞ்சனே யருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது.
சிவராத்திரி வைபவம் மாலையில் மஹான்யாச பாராயணத்துடன் தொடங்கியது. இந்தப் புனிதமான இரவில் கண்விழித்து, விரதம் இருந்து, சிவநாமத்தை ஜபிப்பது பல நலன்களையும் மோட்சத்தையும் தரும் என்று ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் விளக்கினார். சின்மயா இசை மையத்தில் இந்திய இசை கற்றுத்தரும் வள்ளி பாமிடிபடி சிவபெருமான் துதிகளைப் பாடினார்.
ரமா ஸ்ரீராம்
- |