2008 மார்ச் 14 முதல் 16 வரை சான் டியகோவின் இந்திய நுண்கலைக் கழகம் (Indian Fine Arts Academy) இந்திய இசை நடன விழா ஒன்றை நடத்தியது. இந்த விழாவில் எம்.எஸ். ஷீலா, திருவாரூர் வைத்யநாதன், வேலூர் ராமபத்திரன், ஜிஜேஆர் கிருஷ்ணன், லால்குடி விஜயலக்ஷ்மி, ஸ்ரீவல்சன் மேனன், காயத்ரி வெங்கட்ராகவன், அக்கரை ஸ்வர்ணலதா, மாம்பலம் சிவா ஆகியோர் வந்திருந்து கலை விருந்தை வழங்கினர்.
இவர்களுடன் உள்ளூர்க் கலைஞர்களான பிரசாந்த் ராதாகிருஷ்ணன், நாகராஜ் மாண்ட்யா, வினோத் சீதாராமன், ராம்குமார் பாலமூர்த்தி, கிளீவ்லாந்து பாலு, திருவையாறு கிருஷ்ணன், பாபு பரமேஸ்வரன், அஜய் நரஸிம்மா, அனில் நரஸிம்மா, சிவா ராம மூர்த்தி ஆகியோரும் ஜமாய்த்துவிட்டனர். ரமேஷ் சந்திர ஜேனா, ஷ்ரேயா கொல்லுமுடி, திவ்யா தேவகுப்தபு ஆகிய நாட்டியமணிகளும் தாங்கள் சளைத்தவர்களல்ல என்று நிரூபித் தனர். டாக்டர் வெங்கடாசலத்தின் மாணவர் கள் லால்குடியின் பஞ்சரத்னக் கீர்த்தனை களில் மூன்றைப் பாடினர். பரத நாட்டியம், ஒடிஸி, கர்நாடக இசை (வாய்ப்பாட்டும் கருவியிசையும்), திவ்யநாம சங்கீர்த்தனம் ஆகிய கலைவடிவங்கள் இங்கு இடம்பெற்றன. நேஷனல் யுனிவர்சிடியின் பேரா. ஆல்வின் வாரன் குழுவினர் விழா முழுவதையும் வீடியோ படமாகப் பிடித்தனர்.
கிளீவ்லாந்து வி.வி. சுந்தரம் 'ரசிக சிரோமணி' பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டார். கிளீவ்லாந்து தியாகராஜ ஆராத னையை 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்திவரும் இவர் இந்த விழாவுக்கும் இந்தியாவிலிருந்து கலைஞர் களை வருவிப்பதில் பெரிதும் உதவினார். லாஸ் ஏஞ்சலஸ் பகுதியைச் சேர்ந்த திருவையாறு கிருஷ்ணனுக்கு 'சங்கீத ஆசார்யா', சான் டியகோவின் டாக்டர் பிரபாகர் திரிபுரனேனிக்கு 'சமாஜ சேவா ரத்னா' ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.
டெல் மாரின் மேயர் டேவிட் டிரக்கர், பத்மபூஷண் டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன் (கலி·போர்னியா பல்கலை, சான் டியகோ), கீதா பென்னெட் (வீணை வித்வான்) ஆகியோர் வெவ்வேறு நாட்களில் தலைமை ஏற்றனர். இளைஞர் சேவா சங்கத் தலைவர் ஹர்ஷா விஸ்வநாதனின் தலைமையில் தொண்டர் படை இதில் பெரும்பணி ஆற்றியது. ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டும் வகையில் 3000 பேருக்கு மேல் கூடிவிட்ட இந்த விழாவை ராஜ் சுந்தரேசன், சேகர் விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஹர்ஷா விஸ்வநாதன் |