உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008'
நீங்கள் 'கலாட்டா ஐடல்' ஆகலாம்

தமிழ்நாட்டில் சமூக சேவை செய்துவரும் உதவும் கரங்கள் இயக்கத்துக்கு நிதி திரட்ட, அதன் சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் இந்த ஆண்டும் தன் வசந்த விழாவான கலாட்டா-2008 கலைநிகழ்ச்சியை மே 24, 2008 அன்று நடத்த உள்ளது.

சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள ஹேவர்டில் Chabot Collegeக்கு வெளியேயும் அரங்கிலும் நடக்கவிருக்கும் கலாட்டா-2008 நிகழ்ச்சி பெரும் மிகவும் கலகலப்பாக இருக்கும். பிற்பகல் முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடைபெறும். இவற்றின் உச்சமாக மாலையில் பிரபல பல்லவி குழுவினரின் மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.

இதன் ஒரு முக்கிய நிகழ்ச்சி Galaata Idol! இந்த நிகழ்ச்சியில், 15-வயதினர் முதல் முதியவர்வரை பங்கேற்றுப் பல மொழிப் பாடல்களையும் பாடலாம். நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் இரண்டு போட்டி யாளர்கள் பல்லவி குழுவினருடன் சேர்ந்து பாடும் வாய்ப்பைப் பெறுவார்கள். சென்ற வருட கலாட்டா ஐடல்கள் பிருத்வி குருபிரசாத் மற்றும் கிருஷ்ணா உப்புலூரி. இறுதியில் வெற்றி பெற்ற பிருத்வி, கலாட்டா ஐடலில் கலந்து கொண்டவர்களிலேயே வயதில் மிகவும் இளைய பெண் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் பல ஆண்டுகளாக இசைப் பயிற்சி பெற்றவர். தமிழ், தெலுங்கு (சந்திரமுகி தமிழ்ப் படத்திலிருந்து ரா ரா), இந்தி போன்ற பல மொழிப் பாடல்களை அற்புதமாகப் பாடி வென்றார். கிருஷ்ணா உப்புலூரி கர்நாடக இசைப் பயிற்சி இல்லாமலேயே இயற்கையான பாடல் திறனால் இறுதிச் சுற்றை அடைந்தவர். இவர் பல ஆண்டுகளாக நண்பர்களுடன் கேரியோக்கே பின்னணி இசையுடன் பாடி மகிழ்ந்துள்ளவர். எந்தப் பின்னணி கொண்ட வராயினும் உங்களுக்கும் கலாட்டா ஐடல் ஆகும் வாய்ப்பு உண்டு. திரண்டு வாருங்கள்.

போட்டியிடுவதற்கு வேண்டிய விவரங் களைக் காண: www.galaata.org/idol

அங்கு சென்ற வருடப் போட்டியின் வீடியோக்களையும் கண்டு மகிழ்வதுடன் போட்டி விதிமுறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

இம்முறை நடக்கவிருக்கும் பிற்பகல் நிகழ்ச்சிகள்: சிரிப்பா செருப்பா, கலாட்டா ஐடல், பகல் ரகளை (matinee madness). அவற்றுடன் இம்முறை சஹானா என்ற புத்தம்புது நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. சிரிப்பா செருப்பா நிகழ்ச்சியில் விரிகுடாப் பகுதியின் பல்வேறு நகைச்சுவை மன்னர் களும் அரசிகளும் தங்கள் திறனைக் காட்டலாம். பகல் ரகளையில் கோலிவுட் க்விஸ், பாட்டுக்குப் பாட்டு போன்ற போட்டிகள் நடைபெறும். முதன்முறையாக நடைபெற இருக்கும் சஹானா, இசை நடனம் நாடகம் ஆகியவை ஒன்றிணைந்த சுவையான கலவையாக இருக்கும்.

கலாட்டா-2008 பல வள்ளல்களின் நன்கொடையால் சாத்தியமாகிறது. வள்ளல் நிலை அளவில் நன்கொடை வழங்குவதன் பலன்களையும், வழங்கும் முறையைப் பற்றி மேலும் அறியவும், கலந்து கொள்ளவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொண்டராகவும் பார்க்க:

www.ukdavumkarangal-sfba.org, www.galaata.orgl

கலாட்டா, பொழுதுபோக்கைச் சமூக சேவை யாக்குகிறது. வாருங்கள் கலந்துகொள்ள.

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com