ஆசனங்களில் 84 ஆயிரம் வகைகள் உள்ளனவாம். அவற்றில் நூறைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் செய்வதே கடினம். ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த அக்ஷயா சிறுமி 617 ஆசனங்களை ஒரே நேரத்தில் செய்து காட்டியிருக்கிறாள். இவளுக்கு வயது எட்டு!
மூன்றாம் வகுப்பு படித்து வரும் அக்ஷயா விற்கு சிறுவயது முதலே யோகாசனப் பயிற்சியில் ஆர்வம் அதிகம். தனது சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக, 617 யோகாசனங் களைப் பொதுமக்கள் முன் செய்து காட்டினாள் இந்தச் சிறுமி. பள்ளி வளாகத் தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பத்மாசனத்தில் தொடங்கி 617 ஆசனங்கள் வரை தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் செய்து காட்டினாள். ‘உடல் ஆரோக்கியத் துக்காக தினம்தோறும் யோகா செய்து வருகிறேன். எதிர்காலத்தில் நிச்சயமாக சாதிப்பேன்’ என்கிறாள் அக்ஷயா.
அரவிந்த்
- |