மகன் இப்போது மலையூர் மம்பட்டியான்
பிரபல வெற்றிப்பட இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன் நடித்து மிகப் பெரும் வெற்றிபெற்ற படம் மலையூர் மம்பட்டியான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் மீண்டும் தயாரிக்கப்பட இருக்கிறது.

தியாகராஜனின் லக்ஷ்மி சாந்தி மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மம்பட்டியான் பாத்திரத்தில் அவர் மகன் பிரசாந்த் நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தயாரிப்பதுடன் இயக்கவும் செய்கிறார் தியாகராஜன்.

பிரசாந்தின் திரையுலக வாழ்வில் இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் தியாகராஜன்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

-

© TamilOnline.com