ஜுன் 2006: வாசகர் கடிதம்
இதுகாறும் ஜாம்ஜாம் என்று வெளிவந்த தென்றல் சப்பென்று போய்விட்டதே. படிக்க உற்சாகத்தைக் கொடுத்துவந்த நிலை மாறிவிட்டது.

இனியும் நழுவ விட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உற்சாகத்தைக் கொடுக்கும் சத்தான விஷயங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அட்லாண்டா ராஜன்


நடுநிலை நோக்குடன் சிறந்த முறையில் வெயிடப்படும் 'தென்றல்' இதழை ரசித்துப் படிப்பவன் நான். பேரா. இந்திரா பார்த்தசாரதியுடன் சமகாலத்தில் குடந்தை கல்லூரியில் பயின்றவன்.

அட்லாண்டா ராஜன் மே மாத இதழில் குறிப்பிட்டது போலத் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதைய்யர் குடந்தை கல்லூரியில் படித்தவர் அல்லர். மாறாக அவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்றவர். வித்வான் தியாகராஜ செட்டியார் ஓய்வுபெற்ற பின்னர் அவரது பரிந்துரையுடன் தமிழ் ஆசிரியராகப் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் குடந்தையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். நண்பர் தியாகராஜ செட்டியாரின் நினைவாகச் சென்னை திருவல்லிக்கேணியில் தன் இல்லத்துக்குத் தியாகராஜ விலாசம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே. சுப்பிரமணியம்
இர்வைன், கலி.

சென்னையைச் சேர்ந்த நான் ஆரஞ்சு கவுண்ட்டிக்கு என் மக்களோடு தங்கியிருக்க வந்திருக்கிறேன். வந்த இடத்தில் தென்றலைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். அதிலே சுவையான, பயனுள்ள, தகவல் நிரம்பிய எல்லா வகைக் கதை கட்டுரைகளும் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

என் ராகவன்
ஹண்டிங்டன் பீச், கலி.

© TamilOnline.com