குறுக்காக
1. தாமிரம் சேர்ந்த ஒன்று தலை இடை நகை செய்வதற்கேற்றது (4)
3. ஓரங்கிள்ளிய அப்பம் கடுகு வெடித்திட கிட்டு (5)
8. மலை வாழிடம் (2)
9. வசந்த தினத்தில் அடுத்தடுத்த தலைமுறை (4)
10. மாமியார் வீட்டில் பங்குக்கு வந்தவன் (3)
12. முன்னே நீட்டியிருக்கிற தலை வெட்டி வருத்தியது புரட்டியெடுக்கும் (5)
13. துறவி ஒழிக்க வேண்டியது இறந்தவர்க்குப் புதைக்கப்படும் போது நிறைவேறும் (4)
15. தாளக்கருவியில் ஸ்வரங்களை நீக்கிய மழையாக குந்தவை வாழ்ந்த இடம் (4)
16. நெல் விளையா ஊரில் கூழுக்காகும் (5)
19. கூத்தாடி சிவனுக்கெஞ்சியதில் சிறு பகுதி (3)
20. ஆடலரசு பாவம் காட்டுவது இயல்பு (4)
21. 5 இல் கடைசி கடவுள் இல்லையென்றாலும் தோழன் (2)
23. உண்மையெனக் கொள்ளும் புறம் நடுங்கி விளிம்புகளைக் குலுக்கும் (5)
24. வான்மீகியைத் தழுவியவன் தினையன் அனையன் (4)
நெடுக்காக
1. நேர்மை செத்து உள்ளே தீயின்றிக் கெடுதல் (5)
2. ஆயிரங்காலத்துப் பயிரில் ஆயிரம் இருக்கலாமென்பர் (2)
4. காய் ஒன்று இப்படிப்பட்ட வெயிலிலா? (4)
5. தலைக் கவசமின்றி வஞ்சகர் பண் பாட மயங்கி நூற்றுக்கணக்கான எதிரிகளுடன் போரிட்டவர் (3, 5)
6. சமையல் பொருள் நீரில் கொதித்த பாதிக் கலயம் (5)
7. நகர் நடுவேயோலை எதிர்செல்ல நெய்தலில் ஓயாது கேட்கலாம் (4)
11. கட்டுப்படுத்தும் மந்திரத்திற்கு முன் அபூர்வமாக மலர்வதா மிகவும் தேவையானது? (8)
14. பார்வதி கேட்ட முதல் பாதி ஸ்வரம் இரு ஸ்வரங்களுக்குள் (5)
15. கலந்துகொள் கடைசிநாளுக்கு முன் பங்கஜம் மூன்றடி குறைந்தாள் (4)
17. நடந்து கொள்ளும்விதம் நேராயிருக்காத கள்ளனோ? (5)
18. சூட்டில் எரிந்து குமுறி பசு வாலை அடக்கும் (4)
22. கம்பியில் பாய்வதைத் தடுக்கும் விதி? (2)
vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஏப்ரல் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடை களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. ஏப்ரல் 25-க்குப் பிறகு, விடைகளை www.tamil online.com என்ற சுட்டியில் காணலாம்.
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.
மார்ச் 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்:
குறுக்காக: 3. சுமுகமான 6. ருசிகர 7. காவலன் 8. தித்தித்தது 13. சவுக்காரம் 14. மொந்தன் 15. மனதார 16. பனித்திரை
நெடுக்காக: 1. திருவாதிரை 2. சகத்தினை 4. முழுகாது 5. மாநிலம் 9. தழுவு 10. மகாயானம் 11. சம்பூரண 12. நந்தினி 13. சன்னிதி
மார்ச் 2008: புதிர் அரசிகள்
1. விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி.
2. ஹேமா இலக்குமிநாராயணன், ராஸ்வெல், ஜார்ஜியா
3. வி.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை
சரியான விடை எழுதிய மற்றவர்கள்:
ஷீலா கோபால ஸ்வாமி, அட்லாண்டா, ஜார். குன்னத்தூர், சந்தானம், சென்னை வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி. முத்துசுப்ரமணியம், ராஸ்வெல், ஜார்ஜியா லக்ஷ்மி சுப்ரமணியம், மும்பை ஸ்ரீதர் விஜயராகவன், ப்ரீமாண்ட், கலி. முரளி ஸ்வாமிநாதன் பெங்களூரு ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்சி இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
புதிர் விடைகள் அடுத்த மாத (மே 2008) இதழில் வெளிவரும்.