உணவுக் குழாயில் அடைப்பு ஏற்படுவது தென்னிந்திய மக்களிடையே அதிகம் கேள்விப்படுகிறோம். வெவ்வேறு கால கட்டத்தில், வெவ்வேறு அளவுகளில் இந்த அடைப்பு பிரச்சனைகளை உருவாக்குகிறது.
உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
நாம் உட்கொள்ளும் உணவு, தொண்டை யில் ·பேரிங்க்ஸ் (Pharynx) என்ற குழாய் வழியாகச் சென்று, ஈஸோ·பேகஸ் (Esophagus) என்ற குழாய்மூலம் வயிற்றுப் பகுதியை அடைகிறது. இதில், ·பேரிங்க்ஸ் குழாயும் லேரிங்க்ஸ் (Larynx) என்ற மூச்சுக் குழாயும் அருகருகில் அமைந்துள்ளன. உணவு உட்கொள்ளும் போது எபிகிளாட்டிஸ் (Epiglottis) என்கிற வால்வு மூச்சுக்குழாயைத் தற்காலிகமாக மூடி, உணவை ஈஸோ·பேக சுக்குள் செலுத்துகிறது. இதில் கோளாறு ஏற்படுமேயானால் Aspiration என்று சொல்லப்படும் 'புரையேறுதல்' நிகழலாம். அதனால்தான் உணவு உண்ணும் போது பேசக்கூடாது என்று பெரியோர் சொல்லுவ துண்டு. வயதானவர்களுக்கு இந்தச் செயல்முறை தடைப்படுவதால் புரையேறுவதற் கான சாத்தியக் கூறுகள் அதிகம். மேலும் புரையேறுவதினால் Aspiration Pneumonia ஏற்படலாம்.
உடல் இயக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
ஈஸோ·பேகஸ் நமது வயிற்றுப்பகுதியுடன் இணையும் இடத்திலும் ஒரு ஸ்பிங்க்டர் (Sphincter) இருக்கிறது. வயிற்றுக்குள் அனுப்பப்படும் அனுமதிக்கப்படும் உணவு குடலில் மேலேறி வராமல் இருக்க இந்த ஸ்பிங்க்டர் உதவுகிறது. பசி வேளையிலும், உணவின் வாசனையிலும் வயிற்றில் உணவைச் செரிக்க வைக்கும் அமிலம் சுரக்கப்படுகிறது. இந்த அமிலம் அளவுக்கு அதிகமானாலோ அல்லது வேளாவேளைக்குச் சரியாக உண்ணாமால் இருந்தாலோ 'Peptic Ulcer Disease' உண்டாகிறது. இதனால் ஏற்படும் வயிற்றுப்புண் காரணமாக மிகுந்த வலி ஏற்படலாம். உணவு மேலேறி வந்து நெஞ்செரிச்சல் (heartburn) உண்டாகலாம். இந்த வயிற்றுப்புண் காரணமாக ரத்த வாந்தி ஏற்படலாம் அல்லது மலத்தில் ரத்தம் வெளியாகலாம். அமிலத்தைக் குறைக்கும் மாத்திரகள் மூலம் இதைக் குணப்படுத்தலாம். இந்த வகை மாத்திரைகள் (Prilosec) இப்போது மருந்துக் கடைகளில் மருத்துவர் சீட்டு இல்லாமலே கிடைக்கின்றன.
உணவுக்குழாய் அடைப்பு
உணவுக்குழாய் குறுகி அடைத்துக் கொள்ளு வதில் இரண்டு வகைகள் உள்ளன.
தீங்கற்ற அடைப்பு (Benign Stricture)
மேற்கூறிய நோய் அடிக்கடி ஏற்பட்டு, சரியாக மருத்துவம் செய்து கொள்ளவில்லை யென்றால், Peptic ulcer stricture அல்லது வயிற்றுப் புண் அடைப்பு ஏற்படலாம். இதனால், உணவு சரியாகச் செல்லாமல் அடைத்துக்கொள்ளும். உணவுக் குழாயின் வாய்ப் பகுதி குறுகிவிடுவதால் இந்த பிரச்சனை உருவாகிறது. இந்த வகைக் குறுக்கத்தை மருந்துகளால் மட்டும் குணப் படுத்துவது கடினம். உள்நோக்குக் கருவி (endoscopy) மூலம் இந்த குறுகிய வாயைப் பெரிதுபடுத்த வேண்டி வரலாம். நோயின் தீவிரம் அதிகமானால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அமிலம் குறைக்கும் மருந்து களைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டி வரும்.
தீய அடைப்பு (Malignant Stricture)
மேற்கூறிய அடைப்பு புற்றுநோய் மூலமும் ஏற்படலாம். அமிலம் சுரப்பது அதிகமானால், ஈஸோ·பேகஸின் உட்பகுதி அரிக்கப் படுகிறது. இந்த அணுக்கள் உருமாறி, 'Barrets Esophagus' என்ற பெயரில் அழைக்கப்படும் உடற்கூறு ஏற்படுகிறது. இந்த வகை மாற்றம் உள்நோக்குக் கருவி மூலம் செய்யப்படும் திசுச் சோதனையால் (biopsy) கண்டறியப்படுகிறது. இது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியானால் 'premalignant' என்று சொல்லப்படுகிறது. அடிக்கடி endoscopy செய்து வருவதன் மூலம் புற்றுநோய் இருப்பதை ஆரம்பக் கட்டத்தி லேயே கண்டுபிடிக்கலாம்.
புற்றுநோய் உண்டாக வேறு சில காரணங்களும் உள்ளன.
1. புகை பிடிப்பது. 2. மது அருந்துவது 3. மரபணுக்கள் மூலம் ஏற்படுவது 4. அமில மிகுதியால் ஏற்படும் Barrets esophagus.
புற்றுநோயினால் வெறும் அடைப்பு ஏற்பட்டால் சிகிச்சைத் தீர்வுகள் உண்டு. எண்டோஸ்கோபி மூலம் அதை விரிவுபடுத்த வாய்ப்பு உண்டு. ஆனால் புற்றுநோய் தீவிரமாகி அடைப்பு அதிகமானால் அறுவை சிகிச்சை, வேதிம சிகிச்சை (chemotherapy), கதிர்வீச்சு சிகிச்சை (radition therapy) ஆகியவை தேவைப்படலாம்.
நோயின் அறிகுறகள்
1. அமிலம் மேலே ஏறி வருவதால் ஏற்படும் நெஞ்செரிச்சல் (heartburn) 2. உணவு, குறிப்பாக திட உணவுகள், செல்லாமால் அடைபடுதல் 3. திரவ உணவும் செல்லாமல் அடைபடுதல் 4. எடை குறைதல் 5. ரத்த வாந்தி அல்லது மலத்துடன் ரத்தம் வெளியேறுதல்
இந்த அறிகுறிகள் இருந்தால் எண்டோஸ் கோபி அவசியம். அதன்மூலம் நோயின் தீவிரம் கண்டறியப்பட்டு, தகுந்த சிகிச்சை அளிக்கலாம். காரமான உணவுகள் உண்ப தினால் அமிலம் அதிகமாகச் சுரக்கலாம். ஆனாம் காரம் அதிகம் சாப்பிடுவோர் களுக்குப் புற்றுநோய் வரும் சாத்தியம் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. அவரவர் சுவைக்கு ஏற்பக் காரம் சேர்த்துக் கொள்ளலாம். உணவுப் பழக்கத்தால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தால், நடைமுறையை மாற்றிக் கொள்ளவேண்டும்.
வரலட்சுமி நிரஞ்சன் |