ஸ்டெல்லா புரூஸ்
எழுத்தாளர் சுஜாதா மறைந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மனைவி யின் மரணத்தால் எழுந்த துயரம், வறுமை, நோய், தனிமை என எல்லாமும் சேர்ந்து ஸ்டெல்லா புரூஸின் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியை வைத்திருக்கிறது.

ராம் மோகன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்டெல்லா புரூஸ் விருதுநகரைச் சேர்ந்த செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து மாறு பாட்டாலும், தனது இலக்கிய ஆர்வத்தாலும் சென்னையில் தனித்து வாழத் தொடங் கினார். முதன்முதலில் சிற்றிதழ்களில் ‘காளி தாஸ்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கிய இவர், பின்னர் வணிக ரீதி யான பத்திரிகைகளுக்கு எழுதும்போது ஸ்டெல்லா புரூஸ் ஆனார். வித்யாசமான முடிவுகள் கொண்ட காதல் கதைகள் பல வற்றை எழுதிய இவர், தனது மாறுபட்ட நடையாலும், இளமை பொங்கும் கதையம்சத் தாலும் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றார். உளவியல் ரீதியாக இளமையையும், காதலையும் கையாண்ட இவரது தொடர்கதைகள் மிகுந்த வரவேற் பைப் பெற்றன. 'ஒருமுறைதான் பூக்கும்', 'அது ஒரு நிலாக்காலம்', 'மீண்டும் அந்த ஞாபகங் கள்', 'வெகுதூரத்தில் மனம்', 'மாய நதிகள்' போன்ற அவரது நாவல்களின் தலைப்புகளே ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைந்தன. திரைப்படத்துறையிலும், கதை விவாதங் களிலும் பங்கு பெற்றிருக்கும் ஸ்டெல்லா புரூஸின் ’மாய நதிகள்’ தொடர்கதை, தொலைக்காட்சித் தொடராக வந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஜே.கே., அரவிந்த அன்னை ஆகியோரின் தத்துவங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஸ்டெல்லா புரூஸ், அடிக்கடி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்குச் செல்வதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

‘எனக்கு அவரது எழுத்தின் மீது தீராத மயக்கம் உண்டு. அவரே இப்போது மீளா மயக்கத்துக்குச் சென்றது வருத்தத்திற் குரியது’என்கிறார் பட்டுகோட்டை பிரபாகர்.

அரவிந்த்

© TamilOnline.com