தேவையான பொருட்கள்
ரவை - 2 கிண்ணம் புளித்த தயிர் - 3/4 கிண்ணம் வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 8 இஞ்சி - சிறிய துண்டு முந்திரிப் பருப்பு - 6 கடுகு - 1 தேக்கரண்டி கொத்துமல்லி கறிவேப்பிலை மைதா மாவு - 1/2 கிண்ணம் நெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க
செய்முறை
ரவையில் உப்பு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்து மல்லி எல்லாம் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். கடுகும் தாளித்து முந்திரியை நெய்யில் லேசாக வறுத்துச் சேர்க்கவும். கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
மைதாவை துளி உப்புப் போட்டு லேசாக ரொம்ப கெட்டியாக இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். ரவைக் கலவையை சிறிது சிறிதாக உருட்டி, மைதா மாவுக் கரைசலில் தோய்த்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பெரித்து எடுக்க வேண்டும். புதுசா இல்லை? செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
தங்கம் ராமசாமி |