ஐந்தாவது முறையாக முதல்வர் ஆனார் கருணாநிதி
ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகத் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மே 13-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 30 பேர்கொண்ட ஜம்போ அமைச்சரவையும் பொறுப்பேற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் முதன்முதலாகத் தமிழகத்தில் சிறுபான்மை அரசு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக 96 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க. ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கின்றனர்.

அதுபோல், 61 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சி அமைவதும் தமிழக வரலாற்றில் முதல்தடவை. எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க.

தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னையின் 14 தொகுதிகளில் 7 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தானே செயல்படாமல், ஓ. பன்னீர்செல்வத்தை நியமித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் நுழையப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com