டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் பொங்கல், பாரதி விழா
ஜனவரி 26, 2008 அன்று டெலவர் பெரு நிலப் பள்ளத்தாக்குத் தமிழ்ச் சங்கம் (Tamil Association of Greater Delaware Valley) பொங்கல், பாரதிவிழாக்களைக் கொண்டாடியது.

விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங் கியது. குழந்தைகளின் ஆட்ட பாட்டங்கள் சிறப்பாக அமைந்தன. பெரியாழ்வார் பாசுரம், பொம்மை ரைம்ஸ், கிராமிய நடனம், சினிமாப் பாட்டுக்கு நடனம் என்று விழா மெருகேறியது. உடல்நலம், தமிழுக்கு பாரதி, தலைவர் உரை ஆகிய பேச்சுகளும் சிறப்பாக இருந்தன.

குடை நடனம், தில்லானா நடனம், டெலிபோன் மணிபோல் பாட்டுக்கு நடனம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. உணவு இடைவேளைக்குப் பிறகு 'தீ..தீ' பாடலுக்கு மூன்று இளம்பெண்கள் அற்புதமாக ஆடினார்கள். 'புதுமை இதோ இதோ' நிகழ்ச்சியும் பாராட்டத்தக்கது. பிறகு வந்தது முக்கிய நிகழ்ச்சியான நாடகம். 'சிரிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்' (Mississaugs Creations from Canada) என்ற அற்புதமான நகைச்சுவை நாடகம் பார்வையாளர்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தது.

லதா சந்திரமெளலி

-

© TamilOnline.com