ஜனவரி 27, 2008 அன்று அட்லாண்டா பெருநகர் தமிழ்ச் சங்கம் (GATS) பொங்கல் விழாவையும், இந்தியக் குடியரசு தின விழாவையும் விமரிசையாகக் கொண்டாடியது. அமெரிக்க தேசிய கீதத்துடனும் தமிழ்த்தாய் வாழ்த்துடனும் நிகழ்ச்சி தொடங்கியது.
செயலர் சந்திரசேகரன் குப்புசாமி கவிதை நடையில் வரவேற்புரை வழங்கினார். ராகவன் முரளியும் சாந்தி ராமசாமியும் இணைந்து, இனிமையாகவும் நகைச்சுவை உணர்வோடும் நேர்த்தியான தமிழில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினர். மைகேல் ஆஸ்டின் அவர்களின் 'ச..ரி..க..ம' குழுவின ரின் மெல்லிசையுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சங்கத் தின் நிர்வாகக்குழு உறுப்பினர் களைக் குழுவின் தலைவர் மகாதேவன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, சங்கத்தின் தலைவர் மணி ஸ்ரீதரன் தனது அணி யினரை அறிமுகப்படுத்தினார்.
அடுத்து வந்த 'முந்தி முந்தி வினாயகனே' என்ற குழந்தைகளின் கரகாட்டம் இறை வணக்கமாகவும் அமைந்தது. ஏ.ஆர். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' பாடலுக்கு, மூவண்ணக் கொடியுடன் இருபது குழந்தை கள் நடனம் ஆடினர். 'கூல் ·போக்ஸ்' விஜயகுமார் குழுவினரின் கிராமிய நடனங்களும் குத்துப்பாட்டும் ஆட்டமும் ரசிகர்களை ஆட வைத்தது. கிருஷ்ண குமாரின் பல குரல் நிகழ்ச்சியில் எழுந்த சிரிப்பலைகள் அடங்க வெகு நேரமானது. பொங்கல் விழா நிகழ்ச்சிகளை வழங்கிய டாக்டர் ஆதி நாராயணனும், டாக்டர் கவிதா நாராயணனும் சிறப்புரையாற்றி, போட்டி களில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்குப் பரிசளித்தனர்.
அபயநாதன் அவர்களின் பெருமுயற்சியில் உருவான GATS டிரக்டரி வெளியிடப் பட்டது.
பின்னர் உமா முரளிதரன் குழுவினர் வழங்கிய முழுநீள நகைச்சுவை நாட்டிய நாடகம், 'கலாட்டா கல்யாணம்' ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தது. ஆடை அமைப்பும், மேடை அமைப்பும், காட்சி அமைப்பும் 40 பேரை ஒருங்கிணைத்த விதமும் அனைவரையும் வியக்க வைத்தன. முத்தாய்ப்பாக 'ஜெயஸ்ரீ ஜெயஸ்ரீ பாரத மாதா' என்ற சம்ஸ்கிருதப் பாடலுக்கு அமைந்த அற்புதமான நடனம் மனதிற்கு நிறைவாக இருந்தது.
அப்துல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. |