அரிசோனா தமிழ்ப் பள்ளி முதலாண்டு நிறைவு விழா
பிப்ரவரி 2, 2008 அன்று அரிசோனா தமிழ்ப்பள்ளி தனது முதலாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. அரிசோனா வில் வாழும் தமிழ் மக்களுக்காக அரிசோனா தமிழ்ச் சங்கத்தால் பிப்ரவரி 3, 2007 அன்று இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. அரிசோனா தமிழ்ச்சங்கத் தலைவர் சக்தி ராஜ சேகரன், முன்னாள் தலைவர் சம்பத் கரிகாலன், அருள் ராமதாஸ் ஆகியோரின் முயற்சியால் இந்தப்பள்ளி உருவானது. முதலாண்டில் இரு வகுப்புகளில் முப்பத்தாறு மாணவர்கள் இங்கு பயின்றனர். ஆறு ஆசிரியர்கள் தமிழ் பயிற்றுவித்தனர். தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அரிசோனா தமிழ்ச் சங்கம் நடத்திய தீபாவளிக் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் திருவிழாவில் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்கள் பங்கெடுத்துக் கொண்ட கட்டுரைப் போட்டி மற்றும் வார்த்தை விளையாட்டு ஆகியவை அனைவராலும் ரசிக்கப்பட்டன. மாணவர் களின் தமிழ்த் தேர்ச்சியை நேரில் கண்ட பெற்றோரும் மற்றோரும் இது தமிழ்ப் பள்ளியின் சாதனை என்று பாரட்டினர்.

இப்பொழுது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், மொத்தம் அறுபத்தியெட்டு மாணவர்கள் ஐந்து வகுப்புகளில் பயில்கிறார்கள். பத்து ஆசிரியர்களும், ஐந்து துணை ஆசிரியர் களும் தமிழ் பயிற்றுவிக்கின்றனர். அனிதா கோட்டி ஒருங்கிணைப்பாளராகச் செயல் படுகிறார். கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் புத்தகங்கள் இங்கு பயன்படுத்தப் படு கின்றன. வயது வாரியாக தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை என்று மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரை வகுப்புகள் நடைபெறும். வரும் ஆகஸ்ட் மதம் தொடங்கவிருக்கும் வகுப்புகளில் சேர்வதற் கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தொடர்பு கொள்ள:

Mrs. Anitha Kotti
2051 N. Arizona Ave, Suite 101
Kids World Learning Center
Chandler, AZ 85225
Ph: 480.921.3309
E-mail: anithakotti@hotmail.com

தெய்வநாயகம் மெய்யப்பன்

-

© TamilOnline.com