கலி·போர்னியா பல்கலை (பெர்க்கலி) ஏற்பாடு செய்யும் நான்காவது தமிழ்ப்பீட மாநாடு
கலி·போர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்கலி) தமிழ்ப்பீடம் தனது நான்காவது மாநாட்டை 'ஆறு - பல பாதைகளை ஆய்தல்' என்ற தலைப்பில் 2008 ஏப்ரல் 26,27 தேதிகளில் ட்வினெல் அரங்கத்தில் நடத்தவிருக்கிறது. அலெக்ஸ் ·பான் ராஸ்பாட் தொடக்கவுரை நிகழ்த்துவார். ஆனந்த் பாண்டியன், இந்திரா பீட்டர்சன் ஆகியோர் விவாதிப்பர். ஜார்ஜ் ஹார்ட், ஈ. அர்ஷிக், ஐ. பீட்டர்சன், ஏ. வேலுப்பிள்ளை ஆகியோர் மட்டுறுத்துனர்களாக இருப்பர். ஈ. அண்ணாமலை, க்ரிஸ்பின் பிரான்·புட், ஆன் மோனியஸ், லெஸ்லி ஆர், ஸ்ரீலதா ராமன், வாசு ரங்கநாதன், பாலா ரிச்மன், ஆமி அலோகோ, கிரண் கேசவமூர்த்தி, எலிஸபெத் செக்ரான் ஆகியோர் பங்கு பெறுவர்.

-

© TamilOnline.com