தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூக சேவை செய்து வரும் உதவும் கரங்கள் இயக்கத்தின் சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் மீண்டும் இந்த ஆண்டு தன் வசந்த விழாவான கலாட்டா-2008 என்னும் கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த வருட விழாவில் திரட்டப் படும் நிதி, உதவும் கரங்களின் தொடரும் சமூக நலப் பணிகளுக்கு வழங்கப்படும்.
இந்தியப் பொருளாதாரம் வெகுவேகமாக வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும், மிகத் தாழ்ந்த நிலையில் மற்றவர்களின் கருணை யையே நம்பியுள்ள பல ஆதரவற்றோர் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஏழைமை, எயிட்ஸ், மனநோய் போன்ற காரணங்களால் ஏராளமானோர் உயிர் இழக்கிறார்கள். இன்னும் பல குழந்தைகளும் பெண்களும் வயதானோரும் அனாதைகளாகத் தவிக்க விடப் படு கிறார்கள். 25 வருடங்களாக உதவும் கரங்கள் அத்தகையோருக்கு அடைக்கலம் தருகிறது. அங்கிருக்கும் குழந்தைகள் படித்து முன்னேறுவதற்காக ராமகிருஷ்ணா வித்யா நிகேதன் என்னும் உயர்நிலைப் பள்ளி யையும் நடத்தி வருகிறது.
1983-ம் ஆண்டு வித்யா சாகர் உதவும் கரங்கள் இயக்கத்தை நிறுவினார். தான் அனாதையாக இருக்கையில் பராமரிக்கப் பட்டதால் சமூகத்துக்கு நன்றி கூறும் வகையில் அவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையின் முழு ஆர்வமும் இந்த இயக்கம்தான். இவர் பல மதிப்புக்குரியவர்களால் 'தந்தை தெரஸா' எனப் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், தொண்டர் பாலு, உதவும் கரங்களின் சென்னை சரணாலயத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து, வித்யா சாகரைப் பேட்டிக் கண்டதுடன் சேவை நடவடிக்கைகளையும் நேரடியாக கண்டு ணர்ந்தார். அவர் அளித்துள்ள சில குறிப்புக் கள் உதவும் கரங்களின் சாதனைகளை எடுத்துக் காட்டுகின்றன:
உதவும் கரங்களில் நான்கு மாதத்திலிருந்து எழுபது வயது வரையானவர்கள் அடைக் கலம் பெற்றுள்ளனர். கடந்த 25 வருடங்களில் இங்கே 10000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டு, வளர்ந்து கல்வி பெற்றுள்ளனர். அவர்களில் இதுவரை 35 பேருக்குத் திருமணம் கூட நடத்தி யுள்ளார்கள். அங்கு வளர்ந்து கல்வி பெற்ற பலர், பின்னர் உதவும் கரங்களுக்கு மீண்டும் வந்து மற்றவர்களுக்கு சேவை யளிக்கிறார்கள். அவர்கள் பொறியியலாளர், கண் மருத்துவர், மனவியலாளர் போன்ற பலத் தொழில்முறை உயர்நிலைக் கல்வி பெற்று முன்னேறி யுள்ளனர்.
வித்யாசாகர் உதவும் கரங்கள் கல்விக் கூடத்துக்கு இணைய வசதி செய்து சில கணினிகளை நிறுவி, குழந்தைகளுக்கு இளம் வயதிலிருந்தே அந்த நுட்பங்களில் திறனளித்து வருகிறார். ஆனால், கணினிகள் பழையனவாகவும், குழந்தை களின் தேவைக்குக் குறைவாகவும் உள்ள தால் இந்த வசதியைப் பெருக்க விரும்புகிறார். அதற் கான நன்கொடைகள் வரவேற்கப் படு கின்றன. சென்னைக்கருகில் சுனாமியால் அழிவடைந்த ஒரு மீனவர் குப்பத்தில் கிட்டத்தட்ட நூறு வீடுகளைக் கட்டிப் புதுப்பித்துள்ளார். ஹாலந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும் சமூக சேவை பயிலும் பல மாணவ மாணவிகள் உதவும் கரங்கள் சேவை மையத்துக்கு வந்து ஆறுமாதங்களுக்கு மேலாகத் தங்கிச் சேவை புரிந்து வருகிறார்கள்.
உதவும் கரங்களின் சான் ·ப்ரான் ஸிஸ்கோ விரிகுடா வட்டம் 2003-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உதவும் கரங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை வளர்க்கவும், சேவைக்குத் தேவையான நிதி திரட்டவும் அதன் 150-க்கும் மேலான தொண்டர்கள் பாடுபட்டு வருகின்றனர். அதற்காக அவர் கள் கலாட்டா 2004-2007, எஸ்.வி.சேகர், கிரேஸி மோஹன், 'நாடக்' (Naatak), 'க்ரியா' (Krea) போன்ற குழுக்களின் நாடகங்கள் ஆகியவற்றின் மூலம் நிதி திரட்டியுள்ளனர்.
பல சுவையான அம்சங்களைக் கொண்ட கலாட்டா நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் வள்ளல்களின் நன்கொடையாலும் தொண் டர்களின் முயற்சியாலுமே சாத்தியமாகிறது. வள்ளல் நிலை (sponsor level) அளவில் நன் கொடை வழங்குவதின் பலன்களையும், வழங்கும் முறையைப் பற்றியும் கீழே கொடுத்துள்ள இணைய தளங்களில் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
கலாட்டா-2008 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், பங்கேற்பதும், சமூக சேவை யாக மட்டுமல்லாமல் குதூகலமான கேளிக் கையாகவும் அமையும். நன்கொடை அளிக்கவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தொண்டு புரியவும் பார்க்க:
http://www.udavumkarangal-sfba.org http://www.galaata.org
கதிரவன் எழில்மன்னன் |