ரஜினி படத்தில் அமிதாப்
ரஜினி நடிப்பில் 'ரோபோ' உருவாகிறது என்பது பழைய செய்தி. ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் இப்படத்தைப் பற்றி தினமும் ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கிறது. தற்போதைய செய்தி 'ரோபோ'வில் முக்கிய வேடத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் நடிக்க இருக்கிறார் என்பதுதான்.

போதாததற்கு, அர்ஜூன் வில்லன் அல்லது ரஜினியின் நண்பர் பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் 'ரோபோ'. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்கப்படுகிறதாம்.

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com