உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'மீண்டும் ஒரு காதல் கதை' போன்ற படங்களில் கதாசிரியராகப் பணியாற்றிய கே. ராஜேஷ்வர் பின்னர் 'நியாய தராசு', 'அமரன்', 'துறைமுகம்' ஆகியவைமூலம் இயக்குநரானார். தற்போது 'இந்திரவிழா'வை இயக்குகிறார். நாயகன் ஸ்ரீகாந்த், நாயகியர் மாளவிகா மற்றும் நமீதா. இசையமைப்பு யதீஷ்.

இயக்குநர் கே.ராஜேஸ்வர் கூறுகிறார்: 'இந்திரவிழா' மகிழ்ச்சி, கொண்டாட்டம், தடைகள் இல்லாத உற்சாகம், எழுச்சி, உல்லாசம் இவை சார்ந்த கதைக்களத்தைக் குறிப்பாகக் கூறலாம். சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தில் இந்திரவிழா அணுஅணுவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

அப்போது காதல், ஊடல், கூடல், வழிபாடுகள் என்று நடந்துள்ளன. அப்படி ஒரு கொண்டாட்டமே இந்தப் படமும்...' ம்... கேட்கவே உல்லாசமாகத்தான் இருக்கிறது.

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com