அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
'பிரிவோம் சந்திப்போம்' சுஜாதாவின் மிகப் பிரபலமான நாவல். இது 'ஆனந்த தாண்டவம்' என்ற பெயரில் திரைப்படமாகிறது. காந்தி கிருஷ்ணா இயக்க இருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை சுஜாதாவே எழுதியிருக்கிறார். சித்தார்த் என்னும் புதுமுகம் கதாநாயகன்; இணைந்து நடிப்பவர் 'கல்லூரி' தமன்னா. மற்றொரு ஜோடி ருக்மணி. படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பும் ஊட்டி, பாபநாசம் உட்படத் தமிழகத்திலும், இரண்டாம் கட்டம் அமெரிக்காவிலும் நடக்க இருக்கிறது. தயாரிப்பு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். பாடல்கள் வைரமுத்து.

இசை ஜீ.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு ஜீவாவின் உதவியாளர் ஜீவா ஷங்கர். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது ஆனந்த தாண்டவம்.

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com