டாக்டர் கி. வீரமணி நிதிக்கட்டளை
தந்தை பெரியாரின் பகுத்தறிவு மற்றும் மனிதநேயக் கொள்கைகளைப் பரப்புவதைத் தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாக்டர் கி. வீரமணியின் பெயரால் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதற்குத் திரட்டப்படும் 2,00,000 டாலரிலிருந்து பெறப்படும் வருவாயில் 50 சதவீதம், மாணவர்களுக்கு உதவிநிதி வழங்கவும், மாணவர்களும் ஆசிரியர்களும் ஆய்வு செய்யப் பணம் உதவவும், இவற்றுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்யவும் பயன்படும்.

டாக்டர் கி. வீரமணி அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவைத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் பெரியார் மணியம்மை கல்விக்கூட மாணவர்கள் கொண்டாடினர். அந்தச் சமயத்தில் இந்த நிதி அறக்கட்டளைக்கு டாக்டர் சோம இளங்கோவனும் அவரது நண்பர்களும் 25,000 டாலர் தர ஒப்பினர்.

டாக்டர் கி. வீரமணி 'பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி'யின் (PMIST) தலைவர். இதுவோர் அந்நியச் செலாவணியைப் பெற இந்திய அரசின் FCRA அனுமதி பெற்ற அறக்கட்டளையும் ஆகும்.

டாக்டர் கி. வீரமணி நிதிக்கட்டளைக்காக தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation) ஏப்ரல் 30, 2008 வரை நன்கொடைகளை ஏற்கும். இது தமிழ்நாடு அறக்கட்டளையின் அங்கீகாரம் பெற்ற திட்டம்.

அமெரிக்கத் தமிழர்கள் இதற்கான நிதியை 'Tamil Nadu Foundation' என்ற பெயரில் காசோலையாக அனுப்பலாம். அத்துடன் அனுப்பும் கடிதத்தில் 'Dr.K.Veeramani Endowment' என்று குறிப்பிடுவது அவசியம். நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி:

Mr. Mani Rajendran, TNF,
1873 Morgan Circle,
Naperville, IL 60565,
USA.


© TamilOnline.com