முட்டைக்கோஸ் பக்கோடா
தேவையான பொருட்கள்

கோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3/4 கிண்ணம்,
கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி கறிவேப்பிலை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். அதைக் காய்ந்த எண்ணெயில் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு முறுகலாக வேகவிட்டு எடுத்து வடிய

வைக்கவும். இதைப் போலவே தயார் நிலையில் உள்ள பட்டாணி, இளம் சோளம் வைத்தும் செய்யலாம்.

எண்ணெய் காயாமல் செய்தால் பக்கோடா சொதசொதவென்று இருக்கும். அதிகம் காய்ந்தால் மாவு மேலாகமட்டும் வெந்து உள்ளே மாவாக இருக்கும். இதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள

வேண்டும்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com