தேவையான பொருட்கள்
கடலைமாவு - 1/2 கிண்ணம் அரிசிமாவு - 1/4 கிண்ணம் வெங்காயம் - 1 உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் இரண்டாக வெட்டிப் பின் அவற்றை நீளவாக்கில் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து காய்ந்த
எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
இந்த மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு தேக்கரண்டி மைதாமாவையும் சேர்த்துக் கரைத்து வெங்காயத்தை இதில் போட்டுப் பின்னர் இதை காய்ந்த எண்ணெயில் போட்டு எடுத்தால்
சுருள்சுருளான வெங்காயத் தூள் பஜ்ஜி கிடைக்கும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |