தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு (பயத்தம் பருப்பு) - 1 கிண்ணம் பச்சை மிளகாய் - 3 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப ஏதாவது ஒருவகைக் கீரை (நறுக்கியது) - 1/2 கிண்ணம் எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
பருப்பைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து, களைந்து, தண்ணீர் இல்லமல் வடித்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு, மிளகாய்ப் பொடி, பெருங்காயத் தூள் சேர்த்து கெட்டியாக ரவை போல
மிக்சியில் அரைத்து எடுக்கவும். இதில் கீரையைப் போட்டுக் கலக்கவும். பின்னர் இவற்றைச் சிறு உருண்டைகளாக எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதுபோல கடலைப் பருப்பு
கொண்டும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |