அஜீத்தின் கனவுகள் கற்பனைகள்
பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜீத்தின் கால்ஷீட் வேண்டிப் பல கம்பெனிகள் காத்துக் கிடக்கின்றன. ஏற்கனவே ராஜூ சுந்தரத்தின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அஜீத், தொடர்ந்து சிவாஜி புரொடக்ஷனுக்காக மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

பில்லா படத்தில் அஜீத்தின் நடிப்பைப் பார்த்து வியந்த பிரபு தங்கள் படத்தில் நடிக்குமாறு வேண்டுகோள் விடுக்க, வேண்டுகோளை ஏற்றுள்ளார் அஜீத். படத்திற்கு 'கனவுகள் கற்பனைகள்' என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது. இயக்கம் கௌதம் மேனன்.


பில்லா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியின் 'தீ' ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜீத். பழைய 'தீ' படத்தில் சுமன் நடித்த வேடத்தையும், ரஜினி நடித்த வேடத்தையும் ஏற்று தானே இருவேடத்தில் நடிக்க இருக்கிறார்.

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com