மீண்டும் மூன்று முகம்
அஜீத் நடித்த ரீமேக் படமான 'பில்லா'வின் பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் பல படங்கள் ரீமேக் செய்யப்பட உள்ளன. ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மூன்று முகம். ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனை ஏற்படுத்திய படங்களுள் அதுவும் ஒன்று. இந்நிலையில் அந்தப் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.

விக்ரம் அந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. பாட்ஷாவின் ரீமேக் எடுக்கப்பட்டால் தான் அதில் நடிக்க மிக ஆர்வமாக இருப்பதாக விஜய் தெரிவித்திருக்கிறார்.

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com