சாவைக்கண்டு அஞ்சியதில்லை.
நான் எப்போதுமே சாவைக் கண்டு அஞ்சியதில்லை. இறைவன் கொடுத்ததை அவரே எடுத்துக் கொள்வதுதான் விதி.

பேநசீர் புட்டோ
****


ஊடகங்கள், கணிப்பொறிகள் வந்த பின்னும் புத்தகங்கள் தனது ஆளுமையை இழக்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல்கள் தமிழில் உள்ளன. மனிதகுலப் போக்கை மாற்றியமைத்தவை புத்தகங்கள்.

வைகோ
****


நாம் எந்த கொள்கை படைத்தவர்களாக இருந்தாலும், எந்த இலட்சியவாதியாக இருந்தாலும், அல்லது அரசியில் ரீதியாக எந்தக் கட்சி சார்புடையவராக இருந்தாலும், அவர்கள் தமிழுக்காகத் தொண்டாற்றுகின்றவர்கள், அந்தத் தொண்டு அவர்கள் சார்ந்திருக்கின்ற எந்தக் கொள்கைக்கோ, எந்த இலட்சியத் துக்கோ பயன்பட்டாலும் கவலைப் படாமல் அந்தத் தமிழ் ஆற்றலை, அந்தத் தமிழ்த் திறனை பாராட்டி மகிழ்கின்ற, வாழ்த்துகின்ற, ஊக்கப்படுத்துகின்ற அந்தப் பணிக்கு இன்று நேற்றல்ல - தொடக்கக் காலத்திலிருந்து தொடர்ந்து என்னை ஒப்படைத்துக் கொண்டிருப்பவன்.

மு. கருணாநிதி
****


எந்த மொழியையும் அதைப் பேசாத இன்னொரு மொழி மக்களிடம் திணிப் பது சரியல்ல. ஆனால், அவர்களே அம்மொழியை ஏற்கும் வகையில் படைப்புகளைக் கொண்டு வருவது நல்லது.

எஸ்.எஸ். பர்னாலா
****


என் வீட்டில் இலக்கியப் புத்தகங்கள் தான் அதிகம் இருக்கும். வண்ணநிலவன், வண்ணதாசன், லா.ச.ரா., சுந்தர ராமசாமி ஆகியோரின் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. சுமார் 1000 புத்தகங்கள் சேமித்து வைத்திருக்கிறேன்.

நடிகை ரோகிணி
****


101 ஆண்டுகாலத் திரைப்பட வரலாற்றில் இதுவரை விவசாயிகளின் வாழ்க்கையை ஆழமாக யாரும் பதிவு செய்யவில்லை. அனைவரும் உண்டு உயிர்வாழக் காரணமாக இருக்கும் விவசாயியை யாரும் நினைப்பதே இல்லை. அழுக்கு, வியர்வை, நாற்றம் உழைப்பவர்களிடமே இருக்கும். உழைப் பின் அடையாளமான வியர்வையை இச்சமூகம் உதாசீனப்படுத்துகிறது.

தங்கர்பச்சான், இயக்குநர்

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com