சான் பிரான்சிஸ்கோவின் அலமேடா கௌண்டியில் உள்ள ஓலோனே கல்லூரி உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி (Pharmaceutical Manufacturing Certificate Program) ஒன்றை அறிவித்திருக்கிறது. வேலையிழந்தவர்கள் இதைப் பயில்வதன் மூலம் இந்தத் துறையில் ஆரம்பநிலைப் பணிவாய்ப்பைப் பெறமுடியும்.
வகுப்பறை மற்றும் ஆய்வறை பயிற்சிகளைக் கொண்ட விரைவுக் கல்வித்திட்டமாக இது நடத்தப்படுகிறது. பகல்பொழுதுகளில் வாரத்துக்கு 20 மணி நேரம் வீதம் வகுப்புகள் நடத்தப்படும். புத்தகம், ஆய்வகக் கோட்டு, பயிற்றுக் கட்டணம் உட்பட்ட செலவினங்களுக்கு விசேட நிதியின்மூலம் இங்கே பணவுதவி செய்யப்படுகிறது. பயிற்சிக்குப் பின் ஆண்டுக்கு 30K முதல் 50K வரை சம்பளம் கிடைக்கும் வேலைகளில் அமரும் வாய்ப்பு இருக்கிறது. வேலைக்குறைப்பால் பணியிழந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இடங்கள் உள்ளதால் போட்டித் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்த்துக்கொள்ளப்படுவர். மாதிரிக் கேள்வித்தாளைப் பார்க்க: http://www.testprepreview.com/wonderlic_practice.htm
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொள்ள: asuresh@ohlone.edu
பேராசிரியர் அனு சுரேஷ், ஓலோனே கல்லூரி |