பிப்ரவரி 2008: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

1. மதுராந்தகனும் வந்தியத்தேவனும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாடிய ராகம்? (5)
4. சமூகத்தால் இழிக்கப்படுபவள் கதாசிரியரிடம் தஞ்சம் (2)
6. கூடவே வந்த காதலன் தூவிய சுத்தமானவன் இன்றியமைந்தது (4)
7. ஒரு தொழிலதிபர் பார்வ(தி) பின்னே பனித்துளி (4)
9. மர்மமாயிருப்பது முன்பு தெளிவாய் இருந்ததோ? (5)
12. அக்கரைக்குப் போக உதவும் பல்லில் சுரங்கள் (4)
14. நடராஜர் சூழ்ச்சியில் பாபர் கால் இடறி வீழ்ந்தார் (4)
17. ஓர் ஆயுதம் பற்றி யாழ்ப்பாணத்தில் பேசு (2)
18. தெப்பக்குளம் பொலிவு பெற்றுக் குதிரைக்குக் கட்டியங்கூறும் (5)

நெடுக்காக

1. தருமனை விதுரன் சந்தித்த வீட்டுக்குப் புகுந்தவள் ... (3)
2. ... ஒரு வருடத்தில் இந்நிகழ்ச்சியின் நாயகியாவாள் (5)
3. வள்ளி காத்த பயிர் (2)
4. கொடை, மையுடன் 10இல் இருப்பது (3)
5. ஒரு திருமகள் தருவது சுயநலவாதம் (4)
7. தமயந்தியின் மாணவி முடியாமல் ஒப்பிட்டுக் காட்ட வரும் (3)
8. இதன் அரிப்பைத் தாங்கமுடியவில்லை, 5இல் இருப்பதில் ஒன்றை அளி (4)
10. இடதில் பெரும்பாகம் சுற்றிவரத் திறந்த வெளி (3)
11. நிறுத்து, உண்டியலில் போடலாம் (5)
13. போகும் வழியைப் பலர் வந்து விற்குமிடம் (3)
15. அம்மா பிள்ளைதான் இங்கேயும் ஆளுகிறார் என்பர் (3)
16. சங்கத் தமிழ் மூன்றைப் பெற ஔவை தரவந்த மூன்றாவது (2)

தினசரியாக இல்லாமல் மாதமொருமுறை வரும் இப்புதிரை ஓய்வுபெற்ற முதியவரும், வருமான வரி கட்டுமளவு பெருஞ்செல்வம் ஈட்டியவரும் ஆர்வத்துடன் போட்டு, அமெரிக்கா சென்றவர்க் குத் தமிழ் நசிந்த நிலையில் இல்லை என்று நிரூபித்து நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வரும் புதிர் மன்னர்களே பாராட்டுகள்!

நடுக்கடலில் வீசி எறிந்தது போல் குழப்பமான புதிர்க்குறிப்புகளில் மூழ்கடித்ததாக இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தபோது அகலிகை ராமனின் திருவடி பட்டு உயிர்த்து வந்ததுபோல் மீண்டுவந்து என்னை இன்னமும் கடினமான புதிரைப் பற்றி எண்ண வைக்கும் உங்கள் திறம் மிகவும் பெரியது. தமிழன்னை, தமிழ்த்தாத்தா தமிழ்க்கன்னி என்ற தமிழ்க்கடவுளின் பல்வேறு அவதாரங்களின் சகாயம் உங்களுக்கு இருப்பதால் என் வேலை கடினமாகிக் கொண்டே போகிறது. ஜனவரி புதிர் மிகவும் கடின மானது என்று எண்ணியிருந்த போது என்று மில்லாதபடி இப்படியா பதினேழு பேர் சரியான விடை அனுப்புவது! இது நியாயமில்லை.

vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை பிப்ரவரி 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. பிப்ரவரி 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

ஜனவரி 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்


© TamilOnline.com