வாலன்டைன் குக்கீ
தேவையான பொருட்கள்

confectioners' sugar - 1/4 கிண்ணம்
வனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி
தண்ணீர்/பால்/முட்டையின்
வெள்ளக்கரு - சிறிதளவு
சிவப்பு நிற வண்ணம் (food color) - 2 துளிகள்

செய்முறை

மேற்கூறிய எல்லாப் பொருட்களையும் சேர்ந்துக் கலக்கவும். இது வெண்ணெய் போன்ற பதத்தில் இருக்க வேண்டும். அடுத்து குக்கீ செய்யலாம்.

தேவையான பொருட்கள்

வெண்ணெய் - 1/2 கிண்ணம்
நன்கு பொடித்த சர்க்கரை அல்லது confectioner's sugar - 1/2 கிண்ணம்
மைதா மாவு (all purpose flour) - 1 1/4 கிண்ணம்
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
வனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு குழைக்கவும். பின்னர் முட்டை. வனிலா எஸன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

பாத்திரத்தில் மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் பொட்டு நன்றாகச் சலிக்கவும். இதனை முன்னர் செய்த வெண்ணெய்க் கலவையில் சேர்த்துப் பிசையவும். இதை குளிர்சாதனப் பெட்டியில் 2 மணி நேரமாவது ஒரு பாலிதீன் பேப்பரால் சுற்றி வைக்கவும்.

பின்னர் இதை எடுத்து வெளியில் வைத்துவிட்டு, அவனை 350 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குச் சூடு செய்யவும். மாவைச் சப்பாத்தி இடுவது போல் 1/4" கனத்திற்கு இடவும். இதை 3 1/2" ஹார்ட் வடிவிலான குக்கீ கட்டரால் வெட்டவும். ஒரு உதாரணத் திற்கு இவை 8 துண்டுகள் வந்தால் இதில் 4 துண்டுகளை எடுத்து அதில் ஒவ்வொன் றையும் 1 1/2" ஹார்ட் வடிவிலான குக்கீ கட்டரால் நடுவில் வெட்டவும்.

இவை எல்லாவற்றையும் ஒரு குக்கி பேக் செய்யும் தட்டில் (Baking sheet) குறைந்தது 2" இடைவெளிவிட்டு வைக்கவும். (வெந்த பின்னர் நன்கு உப்பி நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளும்.) இதை அவனில் வைத்து இளம்பழுப்பு நிறம் வரும்வரை வேக வைக்கவும்.

3 1/2" ஹார்ட் வடிவ குக்கீ ஒன்றின் மீது இளஞ்சிவப்பு ஃப்ராஸ்டிங் சிறிது எடுத்து நன்கு தடவவும். இதன் மேல் 1 1/2" குக்கீ ஒன்றை வைக்கவும்.

இதுபோல மீதி உள்ள எல்லா குக்கீகளையும் செய்ய அழகிய இளஞ்சிவப்பு வாலன்டைன் சாண்ட்விச் குக்கீகள் கிடைக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com