கலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும்
கலிபோர்னியா பாடத்திட்ட சர்ச்சை குறித்த விவாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், இதை கையாண்ட விதத்தினாலும் தென்றலின் ஆசிரியர் குழு முழுவதுமாய் விலகிக் கொள்ள நேர்ந்து விட்டது. இது போன்ற முக்கியமான, சமூகத்தை பாதிக்கும் சர்ச்சைகளில், இயன்ற வரை, வாதம் மற்றும் எதிர் வாதக் கருத்துக்களை கோரிப் பெற்று ஒரே இதழில் வெளியிடுவோம். முழுவதும் படைப்பாளிகளால் செலுத்தப்படும் ஒரு இளம்பத்திரிக்கைக்கு இது ஒரு நல்ல பாடமும், முக்கிய அனுபவமும் ஆகும்.

முதல் இதழிலிருந்தே எல்லாவகைச் சூழ்நிலைகளிலும் துணை நின்று தென்றலை வழிகாட்டி நடத்த உதவி செய்த திரு. அசோகனுக்கும், குறிப்பாக, திரு. மதுரபாரதியின் அயராத சேவைக்கும், தென்றலின் பல நல்ல மாற்றங்களுக்கும், வளர்ச்சிக்கும், என்னால் போதிய நன்றியைச் சொல்ல இயலாது; மற்றும், இந்நேரத்தில், முன்னாள் ஆசிரியர் திரு. மணி மணிவண்ணனின் தன்னலமற்ற கடின உழைப்பிற்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

நல்லவற்றை உயர்த்திப் பிடிக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், நம் கருத்துகளையும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் மேடையாகச் செயல்படவும், புலம் பெயர்ந்து வாழும் நம் சமுதாயத்திற்கு ஓர் தொடர்புப் பாலமாகச் (support system) செயல்படவும் தென்றல் தொடர்ந்து முயற்சிக்கும்.
உங்கள் ஆதரவுடன்.

நன்றி.
சி.கே.வெங்கட்ராமன்
பதிப்பாளர்

© TamilOnline.com