நியூயார்க் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய பிரம்மோற்சவம்
நியூயார்க் மாநிலத்தில் ரஷ் என்னும் தலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரியை ஒட்டித் தனது ப்ரம்மோற் சவத்தை நடத்தி வருகிறது. இக்கோவிலுக்கு அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் மக்கள் வந்து சிறப்பிப்ப துண்டு. இக்கோவிலில் பணிபுரிவோர் யாரும் ஊதியம் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே ஸ்ரீவித்யா எனும் அதிரஹஸ்ய வழிபாட்டு முறையை உபதேசிக்கிறார் அக்கோவிலின் குருநாதரான ஸ்ரீ சைதன்யானந்தநாத ஸரஸ்வதி.

இந்த ஆண்டும் ஸ்ரீராஜராஜேஷ்வரி கோவில் தனது ப்ரம்மோற்சவத்தைச் சிறப்பாக நடத்தியது. ஆலயத்தில் தினசரி நவாவரண பூஜைகளும் ஹோமங்களும் நடைபெற்றன. அத்தோடு 27 வெள்ளி கலச அபிஷேகங்களும் இடம்பெற்றன. இவ்வாண்டு சிறப்பாக கட்கமாலா தேவதைகளும் தசமஹாவித்யாக்களும் எழுந்தருளிச் சிறப்பித்தனர். இந்தக் கொண்டாட்டத்தை ஒட்டி ஸ்ரீவித்யா கச்சேரித் தொடரும் இடம்பெற்றது. இதில் சிறந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றார்கள். அமெரிக் காவை வசிப்பிடமாய்க் கொண்ட கலைஞர்களும் பங்குகொண்டனர்.

சுஹிர் பொன்னுச்சாமி

© TamilOnline.com