இளமையில் கல்
அவர் பெயர் ததாகத் அவ்தார் துளசி. வயது 20. பெங்களூருக்காரர். சிறுவயது முதலே அவருக்கு கற்பதில் அதிக ஊக்கம் இருந்ததால் அவருக்கு கற்பூர புத்தி. ஒன்பதா வது வயதில் பத்தாம் வகுப்பை முடித்து விட்டார். பிறகு விசேட அனுமதியுடன் முதுகலைக் கல்வியை முடித்தபோது அவருக்கு வயது பன்னிரண்டு தான்! அடுத்து, இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவருக்கான ஆய்வு (Ph.D) மேற் கொள்ள விரும்பினார் ததாகத். ஆனால் வயதுக் குறைவு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் ஜெர்மனியில் நடந்த நோபெல் பரிசு பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின் இந்தியா திரும்பி மீண்டும் தனது மேல்படிப்பிற்கு முயற்சி செய்தார் ததாகட். இறுதியில் அவருக்கு பதினைந்து வயதான போதுதான் இந்திய அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்து படிக்க அனுமதி கிடைத்தது. அதில் சேர குறைந்தபட்ச வயது 19-ஆவது இருக்க வேண்டும் என்ற நிலையில் சிறப்பு அனுமதியுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று குவாண்டம் மதிப்பிடுதல் பற்றிய ஆராய்ச்சியில் தனது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் ததாகத், ஜனவரியில் தனது ஆய்வை முடிக்க இருக்கிறார். சாதனைகளின் மறு பெயர் ததாகத்!

அரவிந்த்

© TamilOnline.com