சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
சேரன் நடிப்பில் 'ராமன் தேடிய சீதை' என்ற படத்தை தயாரித்து வருகிறது மோசர்பேர் நிறுவனம். நான்கு கதாநாயகிகள் கொண்ட இப்படத்தில் 'தூத்துகுடி' பட நாயகி கார்த்திகா மற்றும் ரம்யா நம்பீசன் நாயகிகளாக நடிக்கின்றனர்.

வித்யாசாகர் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் ஜெகன்னாத். விஜய் நடிப்பில் வெளிவந்த 'புதிய கீதை' படத்தை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com