சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம்
லட்சுமி மூவிமேக்கர்ஸ் இந்தியா லிட் நிறுவனம் 'சிலம்பாட்டம்' என்ற புதிய படம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. இது இந்நிறுவனத்தின் 25வது படம். இதில் கோயில் அர்ச்சகராக நடிக்கிறார் சிலம்பரசன்.

நாயகிகளாக மும்பை மாடல்கள் இருவர் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் சந்தானம், கஞ்சாகருப்பு, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தினாவின் இசையில் வளரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் எஸ். சரவணன். சிலம்பாட்டம் ரசிகர்களைக் கலங்கடிக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் எஸ். சரவணன்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com