ஜனவரி 2008: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

3. நிலா மகள் திறமையைச் சோதித்து அளிக்கப்படுவது (5)
6. திலகாவின் தலையைத் தடவிக் கலைத்து பக்தர்கள் சரணடைய விரும்புவது (4)
7. வள்ளலில்லாக் காரியம் நண்பன் முன்வர உபகாரம் (4)
8. நிறைய சம்பாதிப்பவர்கள் பணம் இதில் போகும் (4, 2)
13. கண்ணுக்கெட்டிய வரை மண்ணில்லா இடத்தில் குளிர் வாட்ட, தலையில்லா உடல் (6)
14. வாசனை உணரா நாசி பாதி அதிர்ஷ்டம் தரும் வதனம் (4)
15. சம்பாதித்த ஓர் ஆயுதம் புல்லைப் பிடுங்க காற்றுமழை (4)
16. கைத்தடி முனையொடிந்து புலி விரும்பாததில் விழுந்து புற்றை வளர்க்கும் (5)

நெடுக்காக

1. வயதில் குறைந்திருந்தும் மயக்கத்தில் முதல்வர் இடையொடியத் தழுவியதால் வயது கூடியவர் (5)
2. மயிரிழையில் உயிரிழக்கும் மா (3,2)
4. நாடோறும் அலை நடுவில் சன தத்தளிப்பு (4)
5. பெருமைக்குரியது பாதியானாலும் அளவில் குறைந்ததில்லை (4)
9. சோலையில்லை பன்மலர் பூக்குமாம் சொல்லிடுவாய் சாலையது என்னென்று சற்று (3)
10. ஊராளுமன்றம் கட்சி உடைய வந்த நரா (5)
11. எதிர் பார்த்த சாரதி? (5)
12. ஆயிரங்கண் பெற்று இந்திரன் ரசித்த சிலை? (4)
13. அழிந்துபோகும்படிக் குறைந்த சிந்தனை நிறைவேறும் முன் நம்பிக்கைத் தலைப்படும் (4)

2008 புத்தாண்டு வாழ்த்துகள்

சென்ற மாதப் புதிரில் ஒரு சொல்லைக் கோடியில் வைக்காமல் முதலிலேயே வைத்து அதைப்பற்றி முன்னுரையிலும் கோடி காட்டியிருந்தும் சில வழக்கமான புதிர்மன்னர்கள் ஏமாறியதில் அற்ப சந்தோஷமடைகிறேன்! மற்றோரிடத்தில் 'மோகனம்' என்ற ராகத்தின் ஸ்வரங்கள் என்று அறிந்தவர்க்கு மோகம் என்ற விடையைப் பெறுவதில் சிரமம் இருந்திருக்காது. ஆனாலும் சிலருக்கு அதில் முழுமையான உடன்பாடில்லை என்று சந்தேகிக் கிறேன். எனக்கும் சங்கீதம் தெரியாததால் நான் புரிந்தைதைச் சொல்ல வேண்டும்: 'ஜன்ய ராகம்' என்பது மேளகர்த்தா ராகத்தில் ஓரிரு ஸ்வரங்களை நீக்கிப் பெறப்படுவதாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். அதே வகையில் 'மோகன'த் தில் ஸ்வரங்களுக்குப் பதிலாக ஒரு அட்சரத்தை நீக்கியதையும் 'ஜன்யம்' என்று பொருள்படுத்திக் கொள்ளத் தோன்றிய தாளாத ஆசையின் விளைவுதான் அது.

அனைவருக்கும் 2008 புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டில் ஆடிப்பாடிக் கொண்டாடி இளமையாக எண்ணிக்கொண்டாலும் வயது என்னவோ போன புத்தாண்டுக்கு இன்று ஒன்று கூடித்தானிருக்கிறது (1. நெடு).

vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஜனவரி 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. ஜனவரி 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

டிசம்பர் 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்


© TamilOnline.com