சுக்கினி பொங்கல்
தேவையான பொருட்கள்

அரிசி - 1 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1/3 கிண்ணம்
தண்ணீர் - 3 கிண்ணங்கள்
சுக்கினித் துருவல் - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு -

செய்முறை

பருப்பு, அரிசி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். ஒரு அடிகனமான வாணலியில் நெய் விட்டு பச்சைமிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும். துருவிய சுக்கினி சேர்த்து ஒரு பிரட்டுப் பிரட்டி இதில் கறிவேப்பிலை உப்பு சேர்க்கவும். வெந்த பருப்பு சேர்ந்த சாதத்தை மசித்து இதில் போட்டு நன்றாக ஒன்று சேர வந்ததும் நெய்விட்டுக் கிளறி இறக்கவும்.

தேவையானால் இஞ்சி சீரகம், மிளகும் சேர்த்து செய்யலாம். சுக்கினிக்கு பதில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் அது வெள்ளரிப் பொங்கல். காரட் துருவல் சேர்த்து செய்தால் காரட் பொங்கல். வெள்ளரி, சுகினியுடன் காரட் சேர்த்து செய்தால் பார்க்க நிறம் அழகாக இருக்கும். இவற்றுடன் மசாலா பொடி சிறிது சேர்த்து செய்தால் அது மசாலா பொங்கல்.

இதில் பலவிதமான காய்கறிகளை ஒன்று சேர்த்துச் செய்வதே காய்கறிப் பொங்கல். சமையலிலும் கற்பனை திறனைத் தட்டி எழுப்பி நடைமுறைப் படுத்தினால் பலவித உணவு வகைகளைச் செய்து மகிழலாம்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com