தேவையான பொருட்கள்
ரவை - 1 கிண்ணம் புளித் தண்ணீர் - 3 கிண்ணங்கள் மிளகாய் வற்றல் - 3 நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயத் தூள் - சிறிதளவு உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ரவையைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் தாளித்து சிவப்பு மிளகாயை ஒன்றிரண்டாக ஒடித்துப் போட்டு வறுபட்டவுடன் புளி தண்ணீர் விடவும். இதில் உப்பும் மஞ்சள் தூளும் போட்டுக் கொதிக்க விடவும். இதில் வறுத்த ரவையைப் போட்டுக் கிளறி வேகவிடவும். பின்னர் இறக்கி இதில் வறுத்த வேர்க் கடலை, பொரித்த கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதே போன்று அரிசியையும் ஒன்றிரண் டாக உடைத்துப் புளிப்பொங்கல் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |