தேவையான பொருட்கள்
தேங்காய்ப் பால் - 1 கிண்ணம் பால் - 1/2 கிண்ணம் சோயா பால் - 1/2கிண்ணம் பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் வெண்ணெய் - 1/8 கிண்ணம் சீரகம் - தேக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப முந்திரிப் பருப்பு - நெய் - சிறிதளவு
செய்முறை
முதலில் துவரம்பருப்பையும் அரிசியையும் மூன்று விதமான பாலுடன் ஒரு கிண்ணம் தண்ணிர் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஆறிய பின்னர் இதை எடுத்து அடிகனமான வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து இதில் வெண்ணெயை சேர்த்து நன்றாக ஒன்றுசேரக் கிளறவும். பின்னர் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இதில் சிறிது நெய் விட்டு, பொரித்த இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வெள்ளை மிளகுப் பொடி போட்டு நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஒடித்து வறுத்த முந்திரிப் பருப்பு துண்டங்களை சேர்க்கவும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |