அவல் சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்

அவல் - 1 கிண்ணம்
வெல்லம் - 1/2 கிண்ணம்
கெட்டியான பால் - 1 கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி - 1 சிட்டிகை
வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு - சிறிதளவு
உலர்திராட்சை - சிறிதளவு

செய்முறை

அவலைத் தண்ணீரில் களைந்து தண்ணீரை ஒட்ட வடித்து விடவும். தண்ணீரில் ஒரு கரண்டி கெட்டியான பால் விட்டு இது கொதிவந்ததும் வெல்லம் போட்டுக் கொதிக்கவிடவும் இதில் அவலைச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் நெய்யை விடவும். எல்லாம் ஒன்று சேரக் கிளறி முந்திரி, திராட்சை, ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். தேங்காய்த் துருவலும் சேர்த்துச் செய்யலாம்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com