தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம் பாசிப் பருப்பு - 1/4 கிண்ணம் அடர்பழுப்பு நிறச் சர்க்கரை (dark brown sugar) - 2 கிண்ணம் மொலாஸஸ் - 1 மேசைக்கரண்டி தண்ணீர் - 1 கிண்ணம் பால் - 1 கிண்ணம் வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி கெட்டியான பால் அல்லது ஹா·ப் & ஹா·ப் - 1/2 கிண்ணம் உலர்திராட்சை - சிறிதளவு காய்ந்த அத்திப்பழம் - சிறிதளவு காய்ந்த பேரீச்சம்பழத் துண்டங்கள் - சிறிதளவு காய்ந்த ப்ரூன் பழத் துண்டங்கள் - கொஞ்சம் காய்ந்த ஏப்ரிகாட் பழத் துண்டங்கள் - கொஞ்சம் பாதாம், முந்திரி, பிஸ்தா, பெகான், வால்நட் போன்ற பருப்பு வகைகள் வறுத்து ஒடித்தது - 1/4 கிண்ணம் ஏலப்பொடி - 1 சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பு, தண்ணீர், பால் சேர்த்து அதை குக்கரில் வைத்து 5 முறை விசில் வரும்வரை வேகவிடவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணிர் விட்டு சர்க்கரை, மொலாஸஸ் சேர்த்துக் கரைத்துக் கொதிக்கவிடவும். பின்னர் வெந்த அரிசி பருப்பு கலவையை சேர்த்து மசித்து, அதில் பழக்கலவையும் வெண்ணையும் சேர்த்து நன்கு கிளறி அடிபிடிக்காமல் சிற்து நேரம் கொதிக்க விடவும். கடைசியாக கெட்டியான பால் அல்லது ஹா·ப் & ஹா·ப் சேர்த்துக் கிளறி ஒன்றாக சேர்ந்து வரும்போது வறுத்த பருப்பு வகைகளைச் சேர்த்து ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ஹா·ப் & ஹா·ப் என்பது பாதி பாலும் பாதி கிரீமும் கலந்தது. இது அமெரிக்க அங்காடிகளில் கிடைக்கும். இதில் கொழுப்பு நீக்கிய வகையும் கிடைக்கும். இதை வைத்தும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |