சிங்க அரசி
The Lioness

Once there broke out a dispute among the beasts in a forest. Every animal claimed credit for bearing the greaest number of whelps at a birth.
ஒருமுறை காட்டிலிருந்த மிருகங்களுக்குள் ஒரு தகராறு ஏற்பட்டது. ஒவ்வொரு மிருகமும் தானே மிக அதிகக் குட்டிகளை ஈனுவதாகப் பெருமையடித்துக் கொண்டது.

Time went on and tempers rose but there seemed to be no solution in sight.
நேரம் போயிற்று, சண்டையின் வேகம் அதிகமாயிற்று, ஆனால் முடிவு கண்ணுக்குத் தெரியவில்லை.

They decided to approach the Lioness for settlement of the dispute. "O Lioness the Queen! How many sons did you bear at a birth?" they asked.
தமது தகராறுக்குத் தீர்வு காண எண்ணிப் பெண்சிங்கத்தை அணுகி, "சிங்க அரசியே! ஒரு பிரசவத்தில் நீ எத்தனை மக்களை ஈனுகிறாய்?" என்று கேட்டன.

"Me! Only one, but he is a Lion Cub" said the Lioness proudly.
"நானா! ஒன்றே ஒன்றுதான். அதுவும் சிங்கக்குட்டியாக்கும்" என்றாள் சிங்க ராணி பெருமையோடு.

Value is in the worth, not in the number.
உள்ளடக்கத்தில் இருக்கிறது மதிப்பு, எண்ணிக்கையில் அல்ல.

Aesops' Fables
ஈசாப் நீதிக்கதைகள்

© TamilOnline.com