டெலவர் பெருநில தமிழ்ச் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
நவம்பர் 17, 2007 அன்று, பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ப்ளீமெளத் மீட்டிங்கில் உள்ள கலோனியல் நடுநிலைப் பள்ளியில் நடத்தியது. ஐந்நூறுக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த விழாவின் நிகழ்ச்சிகளில் டெலவர் பெருநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் இதர மாணவர்கள், பெரியவர்கள் என ஐம்பத்து ஏழு பேர் பங்கேற்றனர். உரையாடல், சொற்பொழிவு, திரைப்படப் பாடல்களுக்கு நயன நாட்டியம், பரதநாட்டியம் எனப் பலவகை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன.

இடைவேளைக்குப் பின் சங்கத்தின் வரவு செலவுக் கணக்கும், ஆண்டறிக்கையும் சமர்ப்பிக்கப் பட்டன. தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் திருக்குறள் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் பரிசும் சான்றிதழ்களும் பாலா, சாமிக்கண்ணு, டாக்டர் பிரான்சிஸ் ஜெயராஜ் ஆகியோரால் வழங்கப்பட்டன. தலைவர் அந்தோணி ராஜன் நன்றி நவின்றார். அன்பு அவர்கள் 2008ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் கவிதாஸ் மற்றும் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.

அதன்பின் அனிதா கிருஷ்ணா, ஐங்கரன் குழுவினரின் மெல்லிசைக் கச்சேரி நடைபெற்றது. விழாவை வெற்றி விழாவாக்கிய பெருமக்களுக்குப் பாராட்டும், நிர்வாகிகளுக்குப் பரிசும் சான்றிதழ்களும் தலைவர் அந்தோணி ராஜன் விழா நன்றி நவிலலின் போது வழங்கினார்.

அந்தோணி மைக்கல், டெலவர்

© TamilOnline.com