கழிப்பறை மாநாடு!
உலக அளவில் மிக முக்கியத்துவம் பெற்று விளங்கும் கழிப்பறைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக டெல்லியில் நாற்பது நாடுகள் பங்கேற்கும் உலகக் கழிப்பறை மாநாடு நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு, இதற்கான நிரந்தரத் தீர்வு குறித்து ஆலோசித்தனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் தலையாய பிரச்னையாக விளங்கும் இது, 2025க்குள் தீர்க்கப்படவேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி யுள்ளது. ஐ.நா.வின் கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் சுமார் 20.6 கோடி மக்களுக்கு மேல் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அதில் பெரும் பாலானோர் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 2015-ம் ஆண்டுக்குள் சரிபாதியாகக் குறைக்க வேண்டும் என்று ஐ.நா. முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் முறையான கழிப்பறை வசதி இல்லாமல் துன்பப்படுகின்றனராம்.

அரவிந்த்

© TamilOnline.com