சத்யஜோதி பிலிம்ஸின் வெள்ளிவிழாப் படம்
சத்யஜோதி பிலிம்ஸ் வெள்ளிவிழா ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. 'மூன்றாம் பிறை', 'கிழக்கு வாசல்', 'எம்டன் மகன்' போன்ற படங்களை தயாரித்து அளித்த இந்நிறுவனம் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு புதிய படம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. 'ஜெயம் கொண்டான்' என்ற பெயரில் வளரும் இப்படத்தில் 'உன்னாலே உன்னாலே' நாயகன் வினய் நாயகனாக நடிக்கிறார். நாயகி பாவனா. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் லேகா வாஷிங்டன் நடிக்கிறார்.

வித்யாசாகர் இசையமைப்பில் வாலி, நா. முத்துக்குமார், யுகபாரதி ஆகியோர் பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன. ஆர். கண்ணன் கதை, திரைக்கதை, இயக்கத்தை கவனிக்கிறார். 'ஜெயம் கொண்டான்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com