ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'
வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது சந்தோஷ் சுப்ரமண்யன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். காதலையும், தந்தை-மகன் பாசத்தையும் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாகக் கூறும் படமாக இப்படம் இருக்கும் என்று கூறும் இயக்குநரும், ரவியின் சகோதரருமான ராஜா, இப்படம் ரவியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் படமாகவும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ரவிக்கு ஜோடியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜெனாலியா நடிக்கிறார். ரவியின் தந்தையாக நடிப்பது பிரகாஷ் ராஜ். கீதா, கௌசல்யா, சாயாஜி ஷிண்டே எனப் பலர் நடிக்கும் இந்தப் படத்தில், ரவியின் அண்ணனாக நடிப்பது பிரபல கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ். இசை தேவி ஸ்ரீ பிரசாத். ஜனவரிக்கு ரசிகர்களைக் காண வருகிறான் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'.

தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com