உணர்வுகளின் வெளிப்பாடுதான்...
தொகுப்பு: கே.டி.ஸ்ரீ, அரவிந்த்

கலையின் உன்னதமான வெளிப் பாட்டில் தான் முழுமையான மகிழ்ச்சி யைக் காண முடியும். கட்டுப்பாடில்லாத உணர்ச்சி வேகத்தின் கொந்தளிப்பில் அல்ல. பண்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுதான் கலை எனப்படுகிறது. இசை அப்படிப்பட்ட ஓர் வெளிப் பாட்டின் முயற்சிதான்.

சர்.சி.வி. ராமன்

******


தி.மு.க., அ.தி.மு.க தவிர மற்ற எந்தக் கட்சிகளும் எங்களுக்குத் தீண்டத் தகாதவை அல்ல. 2001-ல் இரண்டுக்கும் மாற்றாக, ஒரு பலமான அணி உருவாகப் பாடுபடுவோம். அதுவரை தி.மு.க. அரசின் மீதான விமர்சனங்கள் தொடரும். அது தி.மு.க.வுக்குக் கசப்பாக இருந்தாலும் கவலைப்பட மாட்டோம்.

டாக்டர் ராமதாஸ்

******


நான் எழுதும் கவிதைகளை அவரிடம் படித்துக் காட்டுவதும் அவர் எங்கிருந் தாலும் தான் எழுதிய கவிதைகளைத் தொலைபேசி மூலம் என்னிடம் படித்துக் காட்டுவதும் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. எனது கவிதைகள் நன்றாக உள்ளனவா என்பதை அறிந்து கொள்ள நிலைக்கண்ணாடி போல இருப்பவர் வைரமுத்துதான்.

மு. கருணாநிதி

******


என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. பாதுகாப்பு கொடுத்திருப்பதாக ஏதோ சொல் கிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. என்னவென்று தெரியவில்லை. அது எப்படி சென்னையில், தமிழ்நாட்டில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னுடைய இல்லத்தை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள்!

ஜெ. ஜெயலலிதா

******


உலக அரங்கில் இந்திய பொருளா தாரம் தலைநிமிர்ந்து நிற்கக் காரணம் விவசாயிகள். விவசாயத் தொழி லாளர்கள், பல்வேறு தரப்பினருடைய உழைப்பு ஆகியவைதான் காரணம். இந்தியாவில் உழைப்பு அதிகமாக உள்ளது.

ப. சிதம்பரம்

******


குடும்பத்தோடு இலக்கியக் கூட்டங் களுக்கு வருவது மன்னிக்க முடியாத பாவங்களில் ஒன்றைப் போலவே கருதப்படுகிறது. விவாகரத்து கோரி வழக்குப் போடுவதற்கு எளிய காரணம் இலக்கியத்தில் ஒருவனுக்கு ஆர்வ மிருக்கிறது என்று சொன்னால் போதும் என்றே தோன்றுகிறது.

எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

******


உன்னதமான சங்கீதம் என்பது, இனிமையான குரலில் வழிந்தோடும் இசையல்ல. எண்ண ஓட்டத்தைத் தெளிய வைத்து, மனதையும் புத்தியையும் இணைக்கும் மந்திரம் அது. சிந்தனை யைச் செம்மைப்படுத்தாத எந்த இசையும், அது எத்தனை இனிமையான குரலில் இருந்து வந்தாலும், சங்கீதமாகக் கருத முடியாது

பத்மஸ்ரீ டாக்டர் பிரபா ஆத்ரே, ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்

தொகுப்பு: கே.டி.ஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com