ஜூன் 2006: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

3. ஒருமாதம், அறுபது நிமிடங்கள் இடைப்பட்ட பாதி நிலா களங்கமற்ற கல் (5)
6. செயல்முறை உறுதியில் கழியில்லா தட்டி (4)
7. இராசேந்திரன் இதைக் கொண்டான் (4)
8. இலக்கணம் மீறியது சிதையுற்றுப் புதைக்க விடாது அந்தாதி (6)
13. புத்தியற்ற தலைக்கு எதிர்வரும் முன்பு அரைப்பல் தண்டோ ரா போடு (6)
14. அம்மன் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஒரு கனி ஒரு ஸ்வரம் (4)
15. இதயத்தில் அன்பில்லாத பாசனம் தேக்கிய சுவர் (4)
16. வேழத்தினுள் காக்கையோ குயிலோ ? (5)

நெடுக்காக

1. நூலை அலசிப் பெறப்படுவது (5)
2. காலை ஒடி மிருகத்தை அடைத்து வேலைகளைத் தேங்கவை (5)
4. எழுத்தாளரின் படைப்பு தொடராது (4)
5. கப்பல் கவிழ்ந்தாலும் கமலம் கை ராசி (4)
9. பனையோலையில் ரசிகன் (3)
10. கடித்துப் பற்றிக் குத்தித் தாக்கப் பயன்படும் கடுமையான எழுத்து (5)
11. சாமத்தில் தேர்ந்தவளாக இருக்கலாம் (5)
12. செல்வத்தை இரட்டிப்பாக்க தெரியாமல் குழம்பும் விதம் (4)
13. நமைச்சல் தோன்ற ஒரு ஸ்வரத்தை உள்வைத்துப் பூசு (4)

திருத்தம்:
ஏப்ரல் 2006 புதிருக்கான விடைகளை மே இதழில் வெளியிடும்போது 12 ஆம் எண்ணில் "அறுவை" என்பதற்குப் பதிலாக "வெறுமை" என்று வந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். பிழையைச் சுட்டிக்காட்டிய சந்திரசேகரனுக்கு நன்றி.

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

மே 2006, விடைகள்

குறுக்காக: 5. பளு 6. லட்சியவாதி 7. ஒதுக்கு 8. பம்பா 9. மிகாத 11. அமுது 13. பாலகன் 16. அன்பார்ந்த 17. தரி

நெடுக்காக: 1. கொளுத்து 2. இலக்குமி 3. உசிலி 4. தேவாரம் 10. தபால் தலை 12. முயன்று 14. கடிதம் 15. தேர்வு

© TamilOnline.com