ரம்யா ஹரிசங்கருக்கு ஹெலனா மொஜெஸ்கா கலாசார பாரம்பரியக் கலைஞர் விருது
அர்ப்பணா நடனக் குழுமத்தின் கலை இயக்குனரும் இந்திய பரதநாட்டியக் கலைஞருமான ரம்யா ஹரிசங்கருக்கு 'ஆர்ட்ஸ் ஆரஞ்ச் கவுண்டி' அமைப்பு 2007க்கான 'ஹெலனா மொஜெஸ்கா கலாசார பாரம்பரியக் கலைஞர்' விருதை அளித்துச் சிறப்பித்துள்ளது. கலைச் சேவையில் 25 ஆண்டுகளைக் கண்டிருக்கும் அர்ப்பணா குழுமத்தை 'லாஸ் ஏஞ்சலஸ் மைல்ஸ்டோன் டான்ஸ் கம்பெனி 2007' என்று எல்.ஏ. கவுண்டி நிர்வாகிகள் குழு கவுரவித்துள்ளது. தனது 25 ஆண்டுகாலப் பயிற்சிப் பணியில் ரம்யா அவர்கள் 300 மாணவர்களுக்கு மேல் கலைப் பயிற்சி அளித்துள்ளார். இவரை 2002ஆம் ஆண்டின் தலைசிறந்த கலைஞராகவும் ஆரஞ்ச் கவுண்டி தேர்ந்தெடுத்தது. தவிர மாநிலத்தின் பல விருதுகளையும், நிதிவழங்கலையும் இவர் பெற்றதுண்டு. பதினைந்துக்கும் மேற்பட்ட இவரது கலைப்படைப்புகள் மூலம் பல சமூக நிறுவனங்களுக்கு 80,000 டாலருக்கும் மேல் நிதி திரட்டி உதவியுள்ளார்.

அர்ப்பணா நடனக் குழுமத்தின் செய்திக்குறிப்பிலிருந்து



© TamilOnline.com